Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் அரிசி விலை உயர்வு

விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் அரிசி விலை உயர்வு

தொடர் பண்டிகை காலமாக இருப்பதால் அரிசி மற்றும் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

குறைந்த விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக, சென்னையில் அரிசியின் மொத்த விற்பனை விலை கடந்த 3 மாதங்களாக உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் அரிசி விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் பொன்னி அரிசி ரூ.1,100 முதல் ரூ.1,350 வரையிலும், இட்லி அரிசி ரூ.950 முதல் ரூ.1,100 வரையிலும், குருணை அரிசி ரூ.800 முதல் ரூ.900 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் பாசுமதி அரிசி ரூ.2,100 முதல் ரூ.4,000 வரையிலும், சீரக சம்பா அரிசி ரூ.4,420 முதல் ரூ.5,200 வரையிலும் விற்பனையானது.

கடந்த வார நிலவரப்படி, பொன்னி அரிசி சிப்பம் ரூ.1,500 முதல் ரூ.1,700 வரையிலும், இட்லி அரிசி ரூ.1,100 முதல் ரூ.1,250 வரையிலும், குருணை அரிசி ரூ.800 முதல் ரூ.900 வரையிலும் விற்பனையானது. பாசுமதி அரிசி ரூ.2,400 முதல் ரூ.4,000 வரையிலும், சீரக சம்பா அரிசி ரூ.4,420 முதல் ரூ.5,200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, பொன்னி அரிசி சிப்பம் ரூ.1,500 முதல் ரூ.1,700 வரையிலும், இட்லி அரிசி ரூ.1,100 முதல் ரூ.1,300 வரையிலும், குருணை அரிசி ரூ.950 முதல் ரூ.1,050 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பாசுமதி ரூ.2,400 முதல் ரூ.4,000 வரையிலும், சீரக சம்பா ரூ.4,500 முதல் ரூ.6,000 வரையிலும் விற்பனையாகிறது.

இதுகுறித்து சென்னை நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க உதவித் தலைவர் எம். மாரியப்பன் கூறும்போது, "விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் கடந்த 3 மாதங்களாகவே அரிசி விலை உயர்ந்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு, வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது" என்றார்.


அரிசியின் பெயர் - செப்டம்பர் - கடந்த வாரம் - இன்று

பொன்னி(26 கி) - ரூ.1100-1350 - ரூ.1500-1700 - ரூ.1500-1700

இட்லி அரிசி(26 கி) - ரூ.950-1100 - ரூ.1100-1250 - ரூ.1100-1300

சீரக சம்பா(30 கி)- ரூ. 4420–5,200 - ரூ. 4420–5,200 - ரூ. 4500–6000

குருணை(26 கி)- ரூ.800-900 - ரூ.800-900 - ரூ.950-1050

பாசுமதி(30 கி)- ரூ.2100-4000 - ரூ.2400-4000 - ரூ.2400-4000

முந்தைய செய்தி
நெசவாளர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க கோரிக்கை
அடுத்த செய்தி
தூத்துக்குடி துறைமுத்தில் சரக்கு கையாளுதல் திறன் 3.01% அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்